இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும். அதன்படி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (டிச. 15) சென்னை வானகரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அண்மையில் மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், எஸ்.எம். கிருஷ்ணா, சீதாராம் யெச்சூரி, ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.