காலாவதியான பஞ்சாமிர்தம் விற்பனை.. சம்பவம் செய்த அதிகாரிகள்

64பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியன் சுவாமி கோயில் வாசலில் பூஜைப் பொருட்கள் விற்கும் கடைகள் இயங்கி வருகின்றன. அந்த கடைகளில், சிறிய டப்பாவில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அந்த பஞ்சாமிர்தம் காலாவதியானவை என்பதை அறிந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து, கடைகளில் இருந்த பஞ்சாமிர்த டப்பாக்களை பறிமுதல் செய்து, குப்பையில் கொட்டினர். மேலும், அங்கிருந்த கடைகளை அதிகாரிகள் எச்சரித்துச் சென்றனர்.

நன்றி: kumudamNews24x7

தொடர்புடைய செய்தி