தேனி: தொடர் மழை காரணமாக உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகாநதி நீர் தேக்கம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து முழுமையான கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும் இரண்டாவது முறையாக உபரிநீர் மறுகால் பாய்ந்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்காத போதிலும் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த நீர் தேக்கம் இன்று (டிச. 15) முழுமையாக நிரம்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.