ஆன்லைன் காய்கறிகள் மற்றும் பலசரக்கு டெலிவரி நிறுவனமான செப்டோ (Zepto), தன்னுடைய வருவாயை நடப்பு நிதியாண்டில் 120 சதவீதம் எட்டியுள்ளது. 2023 நிதியாண்டில் அதன் வருவாய் ரூ.2,026 கோடியாக இருந்த நிலையில் இந்த நிதியாண்டில் அது ரூ.4,455 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வருடம் செப்டோவின் செலவினங்கள் அதிகரித்துபோதிலும் அதிக லாபம் காரணமாக நிறுவனத்தின் நஷ்டம் 2% வரை குறைந்துள்ளது. இந்த தரவுகளை செப்டோ தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான ஆதித் பாலிச்சா தெரிவித்தார்.