நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் வாகன பேரணி.

58பார்த்தது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி I. N. D. I. A கூட்டணி வேட்பாளர் இரண்டாம் கட்டமாக தீவிர பிரச்சாரம் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் வாகன பேரணியாக சென்ற்னர்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது இந்தியாவில் முதல் கட்டமாக நடைபெறக்கூடிய இந்த தேர்தல் நாடு முழுவதும் எதிர்பார்ப்புடன் உள்ளது தற்பொழுது தேர்தல் களம் அக்கினி வெயிலுடன் சேர்ந்து சூடு பிடித்துள்ளது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியின் I. N. D. I. A. கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரகாஷ் இன்று இரண்டாம் கட்டமாக நகராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் குமாரபாளையம் திமுக பொறுப்பாளர்கள் ஞானசேகரன். விஜய கண்ணன். ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் பிரச்சாரம் ஆனது குமாரபாளையம் காவல் நிலையம் முன்பு தொடங்கி உடையார்பேட்டை. மேற்கு காலனி. தெற்கு காலனி. அம்மன் நகர். நாராயண நகர். சுள்ளிமடை தோட்டம். உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழியாக பள்ளிபாளையம் பிரிவு சாலையில் முடிவடைந்தது பிரச்சாரத்தின் போது நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தங்கள் இருச்சக்கர வாகனத்தில் தொடர்ந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி