காவிரி ஆற்றில் சாயக் கழிவுநீர் கலப்பதாக புகார்

73பார்த்தது
காவிரி ஆற்றில் சாயக் கழிவுநீர் கலப்பதாக புகார்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான சாயப்பட்டறைகள் அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன. மேலும் முறைகேடாக அனுமதியின்றி செயல்பட்டுக் கொண்டிருந்த சாயப்பட்டறைகளுக்கு அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் காவிரி ஆற்றில் கலக்கப்படும் சாயக்கழிவு நீரின் அளவு குறைந்த பாடு இல்லை.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் அதிகளவு சாயக்கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் சாய ஆலைகளில் இருந்து நேரடியாக திறக்கப்பட்டு, அது சாக்கடை வழியாக பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் கலப்பதாக சமூக வலைதளத்தில் படம் வெளியாகி உள்ளதால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அனுமதி பெற்று இயங்கும் சாய ஆலைகளில் இருந்தும் சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீர் வெளியேற்றப்படுவதாக, கூறப்படும் நிலையில், சாய நுரை பொங்க காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீர் கலந்து வருவதால் குடிநீர் விஷத்தன்மை உடையதாக மாறுவதோடு இல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் இதுகுறித்து அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்தி