அரசுப் பள்ளியில்  அப்துல் கலாம் நினைவு தினம்  அனுசரிப்பு

79பார்த்தது
அரசுப் பள்ளியில்  அப்துல் கலாம் நினைவு தினம்  அனுசரிப்பு
குமாரபாளையம் அரசுப் பள்ளியில்  அப்துல் கலாம்நினைவு தினம்  அனுசரிக்கப் பட்டது.  


குமாரபாளையம் தனியார் பொறியியல் கல்லூரி விமானவியல் துறையின் சார்பில்  அப்துல் கலாம் நினைவு  தினம் சின்னப்ப நாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அனுஷ்டிக்கப்பட்டது.  தலைமை ஆசிரியை  (பொ) மலர்விழி தலைமை வகித்தார்.   பள்ளி மாணவ மாணவிகளுக்கு வினாடி வினா மற்றும் காகித விமான போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

வினாடி வினா போட்டியில் விண்வெளி பற்றியும்,  அப்துல் கலாம்  சாதனை   பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டது.

காகித விமான  போட்டியில் மாணவர்கள் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில்  விமானத்தை காகிதத்தில் வடிவமைத்து, அதை அதிக தூரம் செலுத்தும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.  இதற்கான ஏற்பாடுகளை தனியார் கல்லூரி நிர்வாகிகள் செய்தனர். கவுன்சிலர் ராஜ், தளிர் விடும் பாரதம் அமைப்பின் தலைவர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி