விசைப்படகில் கடல் நீர் உள்ளே புகுந்து மூழ்கி விபத்து

57பார்த்தது
வேதாரண்யம் அருகே கடற் பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகில் ஓட்டை விழுந்து கடல் நீர் உள்ளே புகுந்து படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

நாகை மாவட்டம் சாமந்தாம் பேட்டையை சேர்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 11 மீனவர்கள் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட மணியன் தீவு கடற்கரையிலிருந்து 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது
படகில் திடீரென ஓட்டை விழுந்து கடல் நீர் படகின் உள்ளே புகுந்தது. சக மீனவர்கள் உதவியுடன் படகை மீட்க முயற்சி செய்தபோது படகை மீட்க முடியாமல் விசைப்படகு கடலில் மூழ்கியது. மீட்பதற்காக வந்த படகின் மூலம் விசைப்படகில் இருந்த 11 மீனவர்கள் கரை வந்து சேர்ந்தனர். சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விசைப்படகு கடலில் மூழ்கியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி