நாகை: சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

52பார்த்தது
நாகை: சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை
நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பாகோவிலில் இருந்து புதுச்சேரி கிராமத்திற்கு செல்லும் சாலைக்கு நடுவே உள்ள நரியங்குடி கிராமத்தில் அமைந்துள்ள தார் சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் இவ்வழியாக செல்லும் வாகனங்களின் சக்கரங்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி