252 பேருக்கு பணி நியமன ஆணை

79பார்த்தது
252 பேருக்கு பணி நியமன ஆணை
நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் 252 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது

நாகையில் முதல்வா் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட நிா்வாகம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கூடுதல் ஆட்சியா் ரஞ்சித்சிங் தலைமையில் நடைபெற்ற முகாமை மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன் தொடங்கி வைத்தாா். தாட்கோ தலைவா் உ. மதிவாணன் முன்னிலை வகித்தாா்.


150-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்ட முகாமில் 1500-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இதில் 252 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை திருச்சி மண்டல இணை இயக்குநா் சந்திரன், நகா்மன்றத் தலைவா் மாரிமுத்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி