சென்னை பூவிருந்தவல்லி ட்ரங்க் சாலையில் ஓடும் காரில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. காரில் புகை வருவதை கண்ட ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு தப்பி சென்றார். தகவல் அறிந்த போக்குவரத்து காவல்துறை, பொதுமக்கள் தீயை அணைக்க போராடினர். பின்னர், தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நீண்ட நேரமாக பாதிக்கப்பட்டது. இது குறித்தான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.