மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா சீருடைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கி சிறப்பறையாற்றினார். இதில் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், மாவட்ட நிர்வாகி மகா அலெக்சாண்டர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.