மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காடு கிராமத்திற்கு உட்பட்ட ராதாநல்லூர் கிராமத்தில் மயானம் ஒன்று அமைந்துள்ளது.
இந்த மயானம் அருகே புதர்கள் மண்டி, குப்பைகள் காணப்படுவதால் சுகாதாரமற்ற முறையில் உள்ளது.
இதனால் இறுதி சடங்கு செய்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.