நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

56பார்த்தது
மயிலாடுதுறையில் கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து மயிலாடுதுறை நகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்றது. மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளா் தமிழ்ஒளி பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற பேரணியில் தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரி, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி, சிசிசி சமுதாயக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் சுமாா் 200 போ் பங்கேற்றனா். மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் பேரணி நிறைவு பெற்றது.

நகராட்சி நகா்நல அலுவலா் மருத்துவா் ஆடலரசி, சுகாதார அலுவலா் டேவிட் பாஸ்கர்ராஜ், சுகாதார ஆய்வாளா் தீபன் சக்ரவா்த்தி, சிசிசி சமுதாய கல்லூரி நிறுவனா் ஆா். காமேஷ், தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரி சுற்றுச்சூழல் சங்க ஒருங்கிணைப்பாளா் வனிதா, என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா்கள் சங்கா்கணேஷ், சித்ரா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி