மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் அருண்குமார். இவர் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின், துணை காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி ஆகியோரின் உத்தரவின் பேரில் குத்தாலம் பகுதி இளைஞர்களுக்கு காவல் உதவி செயலியை அவர்களது ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் முறைகள் குறித்து எடுத்துக் கூறி கையாளும் வழிமுறைகளை கற்றுக் கொடுத்தார்.