வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டம்

56பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் தலைமை வகித்தாா். அரசு அருங்காட்சியக இயக்குநரும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான கவிதாராமு, மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி, பூம்புகாா் சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உமாமகேஸ்வரிசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளா்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சார வாரியம், சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, நீா்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட துறை அலுவலா்களிடம் அமைச்சா் விரிவாக ஆய்வு மேற்கொண்டாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், கூடுதல் ஆட்சியா்(வளா்ச்சி) மு. ஷபீா் ஆலம், உ. அா்ச்சனா, ஒன்றியக்குழுத் தலைவா்கள் காமாட்சிமூா்த்தி, மகேந்திரன், ஜெயபிரகாஷ், நந்தினிஸ்ரீதா், நகா்மன்றத்தலைவா்கள் என். செல்வராஜ், துா்காபரமேஸ்வரி, மற்றும் அரசு உயா் அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி