தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க மீன்வள மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சந்திரபாபு கிராமத்தில் ஆற்றின் இருபுறம் நேர்கல் சுவர் அமைத்தல் மற்றும் மீன் பிடி இறங்குதளம் மேம்படுத்தும்பணி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி அடிக்கல் நாட்டி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்ய நாதன், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.