மயிலாடுதுறை விசித்திராயர் அக்ரகாரம் அருகே காவிரி ஆற்றில் இறந்த நிலையில் பன்றி ஒன்று தண்ணீரில் மிதந்து கொண்டு இருந்தது. இந்த இடத்தை தாண்டி பக்தர்கள் புனித நீராடும் துலா தீர்த்தக்கட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இறந்து மிதக்கும் பன்றியின் காரணமாக தொற்றுநோய் கிருமிகள் தண்ணீரில் பரவி பொதுமக்களுக்கு நோய்கள் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது.
எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.