மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் நேற்று (செப்.22) விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் உடலை நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதனை அடுத்து மயானத்திற்கு செல்லும் சாலை போதிய வசதி இல்லாததால் வயல் மற்றும் வாய்க்கால்களின் வழியே உடலை எடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் இறப்பு ஏற்பட்டால் மயானத்திற்கு செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே மயானத்திற்கு செல்ல சாலை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.