மயிலாடுதுறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பொது போக்குவரத்தை பயன்படுத்த வலியுறுத்தியும் மிதிவண்டியில் கூடுதல் ஆட்சியர் மு. ஷரிப் ஆலம் அலுவலகத்திற்கு சென்றது பலதரப்பு மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. அதிகாரிகள், பொதுமக்கள் அதிக அளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என கூடுதல் ஆட்சியில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.