கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று (நவ., 17) ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடலின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என அறிவித்துள்ளது.