இந்திய ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டள்ளது. அந்த அழைப்பாளர் லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை செயல் அதிகாரி என்று கூறிக்கொண்டார். இது பற்றி உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மும்பை போலீசார் நடத்திய விசாரணையில் புரளி என்பது தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரிசர்வ் வங்கியை வெடிகுண்டு வைத்து தாக்கப் போவதாக அந்த நபர் மிரட்டியதாக கூறப்படுகிறது.