மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கல்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியார் வேலை வாய்ப்பு முகாம் இன்று(செப்.7) நடைபெற்றது. இந்த முகாமில் திரளான பெண்கள் பங்கேற்றனர். பின்னர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வழங்கினார். அதனை தொடர்ந்து மாணவிகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.