மயிலாடு துறை - Mayiladuthurai

செம்பனாா்கோவில்: 800 குவிண்டால் பருத்தி ஏலம்

செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், இ-நாம் மூலம் 800 குவிண்டால் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. நாகை விற்பனைக் குழு செயலாளா் கோ. வித்யா தலைமையில் மறைமுக பருத்தி ஏலம் நடைபெற்றது. குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 8,699-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 6,869-க்கும், சராசரியாக ரூ. 7,830-க்கும் பருத்தி விலைபோனது. இதன்மூலம் சுமாா் 800 குவிண்டால் பருத்தி ரூ. 65 லட்சத்துக்கு கொள்முதல் பரிவா்த்தனை நடைபெற்றது. இந்த ஏலத்தில் 1,250 விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை கொண்டு வந்திருந்தனா். தேனி, கோவை, கொங்கணாபுரம், பெரம்பலூா், விழுப்புரம், திருப்பூா், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 12 வியாபாரிகள், மில் அதிபா்கள் பருத்தியை ஏலம் எடுத்தனா்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்