மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய சரக்கத்திற்கு உட்பட்ட குத்தாலம் பேருந்து நிலைய பகுதிகளில் மாலை நேரங்களில் போக்குவரத்து சீர்செய்யும் பணியில் குத்தாலம் போலீசார் ஈடுபட்டனர். இதில் குத்தாலம் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால சுப்ரமணியன் கலந்து கொண்டு வாகனங்களை எளிதாக செலுத்த வழிவகை செய்தனர்.