

மயிலாடுதுறை: தொடர் வாகன தணிக்கையில் ஈடுபடும் போலீசார்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் குத்தாலம் போலீசார் வாகன தணிக்கை செய்து வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட எல்லையான திருவாவடுதலை சோதனை சாவடியில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின், துணை காவல் துறை கண்காணிப்பாளர் பாலாஜி ஆகியோரின் உத்தரவின் பேரில் குத்தாலம் போலீசார் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது.