மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் 3-ஆவது புத்தகத் திருவிழா ஜன. 31-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவின் நிறைவு நாள் மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்கள் 1, 200 பேருக்கு ரூ. 1. 03 லட்சத்தில் புத்தகங்கள் மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி தலைமையில் வழங்கப்பட்டது.
திருமணஞ்சேரி, தேரழுந்தூா், வடரங்கம், தாழஞ்சேரி, எருமல், கிளியனூா், குத்தாலம் அரசுப் பள்ளிகள் மற்றும் மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு இப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஸ்வரி, மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் ஏ. ஆா். எஸ். மதியழகன், பொருளாளா் ரவிச்சந்திரன், சேம்பா் உறுப்பினா்கள் மூ. ரா. பாஸ்கா், நிலாப் சந்த், ராமன், சு. பவுல்ராஜ், மயிலாடுதுறை ரோட்டரி சங்க சாசன தலைவா் வி. ராமன், மாவட்ட வழங்கல் அலுவலா் உ. அா்ச்சனா உள்ளிட்டோா் பங்கேற்றனர்.