மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவிலில் ஸ்ரீ தையல்நாயகி உடனாகிய வைத்தியநாதசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. செவ்வாய் பரிகார ஸ்தலமான இக்கோவிலில் செல்வமுத்து குமாரசுவாமிக்கு தை மாத உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனை ஒட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீர்த்த கரையில் எழுந்தருளினார். தொடர்ந்து அஸ்திர தேவருக்கு சிறப்பு வழிபாடு செய்து தீர்த்தமளிக்கும் தீர்த்தவாரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.