மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மேற்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மேலையூர் ஊராட்சியில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற உள்ள வன்னியர் சங்கத்தின் சார்பில் நடைபெறும் சமய சமுதாய நல்லிணக்க மாநாடு குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த ஆலோசனை கூட்டத்தில் செயலாளர் மதன்ராஜ் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் சி ஆர் சி கண்ணன் உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.