மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினருக்கு வாராந்திர யோகா பயிற்சி ஆனது மயிலாடுதுறை காவல் நிலையம் அருகில் உள்ள டி இ எல் சி விளையாட்டு மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த யோகா பயிற்சியில் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். யோகா பயிற்சியானது வாரம் தோறும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் காவலர்கள் அனைவரும் யோகா பயிற்சிகளை ஆர்வமுடன் செய்தனர். இந்த யோகா பயிற்சியானது காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.