மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் பகுதியில் "உங்களை தேடி உங்கள் ஊரில்"திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று அதிகாலை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பேருந்து நிலையத்தில் உள்ள கடை வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, வட்டாட்சியர் இளங்கோவன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.