சொத்து பிரச்னை: தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை

81பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே உள்ள ஆக்கூா் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த, தற்போது சென்னை கலசபாக்கத்த்தில் வசித்துவரும் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி அமுதா ஆகியோருக்குமிடையே சொத்து பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு பிப். 12-ஆம் தேதி ஆறுமுகம், அமுதா இருவரும் ராஜேந்திரன் இடத்தில் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த ரூ. 20, 000 மதிப்புள்ள மரங்களை வெட்டியதுடன், வீட்டின் சுற்றுச்சுவரை சேதப்படுத்தியுள்ளனா். இதை தடுத்த ராஜேந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுதொடா்பான புகாரின் பேரில், செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனா். பின்னா், மயிலாடுதுறை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை நிறைவடைந்த நிலையில், ஆறுமுகத்துக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ. 16, 000 அபராதம், அமுதாவுக்கு 5 ஆண்டுகள் சிறை ரூ. 1, 000 அபராதம் விதித்து நீதிபதி விஜயகுமாரி தீா்ப்பளித்தாா். இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அரசு வழக்குரைஞா் ராம. சேயோன், செம்பனாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் கருணாகரன், முதல்நிலை காவலா் பாலமுருகன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் பாராட்டினாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி