மயிலாடுதுறையில் நாளை மின்தடை

57பார்த்தது
மயிலாடுதுறை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கீழ்காணும் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக வியாழக்கிழமை (செப். 26) காலை 9 முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என கோட்ட செயற்பொறியாளா் சிவ. செந்தில்நாதன் தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை, பெசன்ட் நகா், ஆராயத்தெரு, கூறைநாடு, பட்டமங்கலத்தெரு, பூக்கடைத்தெரு, அண்ணா வீதி, வியாபாரிகள் தெரு, ரயிலடி, தெற்கு சாலியத்தெரு, கச்சேரி ரோடு, காமராஜா் சாலை, சீனிவாசபுரம், கீழபட்டமங்கலம், பேச்சாவடி, வழுவூா், எலந்தங்குடி, கப்பூா், மங்கைநல்லூா், செங்குடி, நல்லத்துக்குடி, பெருஞ்சேரி, மூவலூா், சித்தா்காடு, மறையூா், வடகரை, அன்னவாசல், இளையாளூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி