உதவி தலைமை ஆசிரியர் எம்எல்ஏவிடம் புகார்

51பார்த்தது
மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்தலின் போது துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை பொதுப்பணி துறையினர் சரி செய்து தராததால் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவதி அடைந்துள்ளனர். தொடர்ந்து கழிப்பிட வசதிக்கு கூட தண்ணீர் இல்லை என்றும், பலமுறை கடிதம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமாரிடம் மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் நேற்று புகார் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி