உப்பு சத்தியாகிரஹ நினைவுத் ஸ்தூபிக்கு ஆளுநர் மரியாதை

77பார்த்தது
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாகை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்து இறங்கியவர் சாலை மார்க்கமாக வேதாரண்யம் வருகை தந்தார்.

வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி பகுதியில் 1930 ஆண்டு ஏப்பரல் மாதம் 30ஆம் நாள் மூதறிஞர் ராஜாஜி தலைமையில் சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட ஆங்கிலேயருக்கு எதிராக உப்பு அல்லும் போராட்டம் நடைபெற்றது. அந்த இடத்தில் நினைவு தூண் எழுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உப்பு சத்தியாகிரஹ நினைவு ஸ்தூபிக்கு நேற்று(செப்.17) வருகை தந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்பு அருகே உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாற்றை நினைவு கூறும் புகைப்படங்களை பார்வையிட்டார். வேளாங்கண்ணியில் நேற்று இரவு தனியார் விடுதியில் தங்கிய ஆளுநர் இன்று காலை நடைபெற உள்ள மீன்வள பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.

தொடர்புடைய செய்தி