வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்று(செப்.7) நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பாக பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா செய்தியாளர்களிடம் கூறும்போது: வேளாங்கண்ணி வருகை தரும் பக்தர்கள் வசதிக்காக அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பேரூராட்சி சார்பில் சுழற்சி முறையில் 400 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு தூய்மை பணிகள் நடைபெற்ற வருவதாகவும் இதுவரை 300 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.