கீழ்வேளூர் தாலுகாவில் கனமழை

67பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா பாலக்குறிச்சி பகுதியில் நேற்று மாலை ஐந்து மாலை அளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து அரை மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையானது இப்பகுதியில் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நெல் வளர்வதற்கு பயனாக இருக்கும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். மேலும் விவசாய பணிகள் தொடர்ந்து செய்ய பயன்படும் எனவும் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில், இந்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி