நாகப்பட்டினம் மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் இயக்குதல் மற்றும் பராமரிப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் துவக்கி வைத்தார்:
நாகப்பட்டினம் அவுரி திடலில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் இயக்குதல் மற்றும் பராமரிப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதில் பவர் ட்ரில்லர், களை எடுக்கும் கருவிகள், நடவு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள், லேசர் லெவலர், வைக்கோல் கட்டும் கருவிகள், கைத்தெளிப்பான், சொட்டு நீர் தெளிப்பு, நீர் பாசன கருவிகள் உள்ளிட்ட இயந்திரங்களை கையாள்வதற்கும் பராமரிப்பதற்கும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் விவசாய நிலங்களில் ட்ரோன் மூலம் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும் முறை நேரடி செயல் விளக்கம் காட்டப்பட்டது. இதில் நாகை மாவட்டம் முழுவதிலும் இருந்து 100 கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.