நாகை அருகே சுற்று சூழலை பாதிக்காத நவீன ஈகோசான் கழிவறை திறப்பு யூ ஆர் கோடு மூலம் செல்போனில் பயன்படுத்தும் முறைகள் மற்றும் பயன்கள் குறித்து அறிந்து கொள்ளும் வசதி
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரம் கிராமத்தில் உள்ள உதவும் நண்பர்கள் தொண்டு நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் நிலத்தடி நீரை பாதிக்காத வகையில் ஒரு கழிவறை 80, 000 ஆயிரம் 4 லட்சம் மதிப்பீட்டில் 5 நவீன ஈகோசான் கழிவறை திறக்கப்பட்டது இந்தக் கழிவறையில் மழைநீர் சேகரிப்பு திட்டம், க்யூ ஆர் கோடு மூலம் செல்போனில் ஸ்கேன் செய்தால் எவ்வாறு பயன்படுத்துவது இதனால் என்ன பயன் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த கழிவறை உருவாக்கப்பட்டுள்ளது இதில் உதவும் நண்பர்கள் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் திருமதி சியாமளா ரமணி , மற்றும் அயர்லாந்து மாணவர்களுடன் நிறுவனத்தின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்