பிக் பாஸ் சீசன் 8-ல் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது. வெற்றிக்கு பிறகு அவர் வெளியிட்ட வீடியோவில், “எனக்கு இந்த அளவுக்கு மக்களின் ஆதரவு இருக்கும் என நினைக்கவில்லை. எல்லாரும் சேர்த்து இந்த டைட்டிலை என்னிடம் கொடுத்துள்ளீர்கள், அவ்வளவு கனமாக இருக்கிறது. என் உழைப்பிற்கு இவ்வளவு அன்பா என வியப்பாக இருக்கிறது. அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி” என்றார்.