தவறான அக்கவுண்டிற்கு கோடிகளை அனுப்பிய மஸ்க்

52பார்த்தது
தவறான அக்கவுண்டிற்கு கோடிகளை அனுப்பிய மஸ்க்
எலான் மஸ்க்-ன் X தளத்துக்கு தடைவிதித்த பிரேசில் நீதிபதி அலெக்சாண்டிரே டிமொரேஸ், தடையை நீக்க வேண்டுமானால், 5.2 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.43 கோடி) அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். பிரேசில் நாட்டின் 2.2 கோடி பயனர்களை இழக்க விரும்பாத மஸ்க், அபராதம் செலுத்த சம்மதித்தார். தொடர்ந்து, நீதிமன்றம் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பாமல், தவறுதலாக வேறு வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளார். சரியான கணக்குக்கு பணத்தை அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி