முரசொலி செல்வம் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், "முரசொலி செல்வம் மறைவெய்தினார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். சிலந்தி என்ற பெயரில் அரசியல் கட்டுரைகளை எழுதி, திராவிட இயக்க கொள்கைகளை பரப்பியவர். ஆட்சியாளர்களின் அடக்குமுறையையும், வழக்குகளையும் துணிவுடன் எதிர்கொண்டவர். முரசொலி செல்வம் மறைவு திமுக, முரசொலி நாளேட்டிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்” என்றார்.