முரசொலி செல்வம் மறைவிற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "திரு. முரசொலி செல்வம் அவர்கள் குடும்பத்தினருக்கும், முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழக பாஜகல சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. முரசொலி செல்வம் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!" என்று பதிவிட்டுள்ளார்.