அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியின் தலைவர் நந்தினியின் கணவர் கரிகாலன் மாரடைப்பால் காலமானார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி திமுக தலைவராக இருப்பவர் நந்தினி. இவருடைய கணவர் கரிகாலன் மாரடைப்பால் காலமானார். இது குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.