உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு உலக அளவில் இருந்து பலரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள குகேஷுக்கு ரூ.5 கோடி ரொக்கப்பரிசு வழங்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், குகேஷுக்கு ரூ.5 கோடி பரிசு அறிவித்துள்ளார்.