ஈரானில் நடந்த பேருந்து விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஈரானில் பேருந்து கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழந்தனர். அவர்கள் பயணித்த பேருந்து ஈரானின் யாஸ்த் என்ற இடத்தில் உள்ள தஃப்தான்-தெஹ்ஷிர் சோதனைச் சாவடி அருகே கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.