எதிர் வரும் தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்ள மின்துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நிதித்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஜுன் 7) ஆய்வு மேற்கொண்டார். காணொளி காட்சி வாயிலாக, சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், காணொளி காட்சி வாயிலாக அனைத்து தலைமை பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநர் அனீஷ் சேகர், இணை மேலாண்மை இயக்குநர் விஷு மஹாஜன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.