"மோடியின் குடும்பம்" - இனி கிடையாது

53பார்த்தது
"மோடியின் குடும்பம்" - இனி கிடையாது
எக்ஸ் பக்கத்திலிருந்து "மோடியின் குடும்பம்" என்ற வாசகத்தை நீக்க பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், தேர்தல் பிரச்சாரத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சமூக ஊடகங்களில் என் மீதான பாசத்தின் அடையாளமாக 'மோடியின் குடும்பம்' என வைத்த்தனர். இந்திய மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உங்கள் சமூக ஊடகங்களில் இருந்து 'மோடியின் குடும்பம்' என்பதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த பெயர் மாறலாம். ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரு குடும்பம் என்ற நமது பந்தம் வலுவாகவும், உடைக்கப்படாமலும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you