மூன்று கால்களுடன் அதிசய கோழி.. வைரலாகும் புகைப்படம்

84பார்த்தது
மூன்று கால்களுடன் அதிசய கோழி.. வைரலாகும் புகைப்படம்
உத்திரப் பிரதேச மாநிலத்தின் பஹ்ரைச் நகரில் பிராய்லர் கோழிக்கு மூன்று கால்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அஃப்தாப் ஆலம் என்பவர் அப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக கோழிக்கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வந்த கோழியைப் பார்த்தபோது இது தெரியவந்துள்ளது. தான் இதுவரை பல கோழிகளைப் பார்த்துள்ளதாகவும் ஆனால் இதுபோன்று மூன்று கால்களுடன் இருக்கும் கோழியை முதன்முதலில் பார்ப்பதாகவும் கூறியுள்ளார். அந்த கோழியை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி