விஜய்சேதுபதியின் கோரிக்கைக்கு அமைச்சர் பதில்

52பார்த்தது
விஜய்சேதுபதியின் கோரிக்கைக்கு அமைச்சர் பதில்
நடிகர் விஜய்சேதுபதி, “நல்லகண்ணு அய்யாவின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு, அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய நல்லகண்ணு அய்யாவின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி